அடிதடியில் வந்து நிற்கும் முகென்-அபிராமி காதல்...பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு

Aug 13, 2019 05:34 PM 427

இன்று பிக்பாஸ் வீட்டில் 51வது நாள்.நேற்று பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களுக்கு ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது.வீட்டில் உள்ளவர்கள் ஹோட்டலில் பணிபுரிபவர்கள் போல் நடந்துகொண்டு வீட்டிற்கு வரும் விருந்தாளியை நன்றாக பார்த்து கொள்ள வேண்டும் என்பது தான் டாஸ்க்.விருந்தாளியாக போட்டியை விட்டு வெளியேறிய வனிதா வந்தார்.

விருந்தாளியாக வந்தாலும் அவர் போட்டியாளருள் ஒருவராக மாறி அனைவரிடமும் உட்கார்ந்து பேச தொடங்கிவிட்டார். வீட்டில் நடக்கும் பிரச்சனை அனைத்தையும் பேசினார்.அபிராமியிடம் ’நீ நேர்கொண்ட பார்வை படத்துல நடிச்சிருக்க, அந்த படத்தோட கதை தெரிஞ்சி தான் நடிச்சியா? அப்படி ஒரு படத்தை வெளில நடிச்சிட்டு உள்ளே உட்கார்ந்து இவன் கிட்ட கெஞ்சுற என கேள்வி எழுப்ப, அபிராமியோ அழ தொடங்கிவிட்டார்.இப்படி விவாதங்களுடன் நேற்றைய நாள் முடிவடைந்தது.

இன்றைய பிக்பாஸ் முதல் ப்ரோமோவில் bed room-ல் அபிராமி,வனிதா ஷெரின் மூவரும் உட்கார்ந்து பேசிகொண்டிருக்கின்றனர்.வனிதாவோ அபிராமியிடம், தில்லான தைரியமான பையனா இருந்தா தப்பே கிடையாது, எனக்கு முன்னாடி அப்படி இருந்தது அப்படினு அவன் சொல்லிருந்தா நம்ம யாருமே எதும் சொல்ல முடியாது.ஆனால், நீ தான் பின்னாடி ஓடிட்டு இருக்க கடைசீல அவன் ஹீரோ ஆயிட்டான் என கூற, அபிராமி மறு வார்தை பேசாமல் அமைதியாக இருக்கிறார்.

இரண்டாவது ப்ரோமோவில் அபிராமி எதையோ சொல்லி முகெனிடம் கத்துகிறார்.முகனோ அபிராமியை அடிக்க நாற்காலியை எடுக்க வீட்டில் உள்ள அனைவரும் திகைத்து போய் நிற்கின்றனர்.மூன்றாவது ப்ரோமோவில் சாண்டி மாஸ்டர் வனிதாவிடம் கோபமாக பேச, கவினோ இவ்வளவு பிரச்சனை-லாம் வேணாம் அக்கா என கூற, வனிதாவோ பஞ்சாயத்து நடக்காதனால பிரச்சனை இல்லனு நீங்க நினைச்சிட்டு இருக்கீங்க.நான் அவன் பன்றது தப்புனு புரிய வச்சி இருக்கேன்.ஏனா அந்த பொண்ண பத்தி எனக்கு தெரியும் என கூறுகிறார்.வனிதா வந்தவுடன் பிரச்சனை தீர்த்து வைப்பார் என நினைத்தால், தற்போது தான் பிரச்சனை அதிகரித்துள்ளது.

Comment

Successfully posted