ஐபிஎல் தொடரில் 2வது இடம்பிடிக்க போராடும் மும்பை-டெல்லி அணிகள்

May 03, 2019 03:28 PM 221

இறுதி கட்டத்தை எட்டியுள்ள ஐபிஎல் தொடரில் சென்னை, மும்பை, மற்றும் கொல்கத்தா ஆகிய அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ள நிலையில், 4வது அணியாக அடுத்த சுற்றுக்கு செல்வதில் ஹைதராபாத் ராஜஸ்தான் அணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது.

கடந்த மார்ச் மாதம் 23 ஆம் தேதி பெரும் எதிர்பார்புடன் தொடங்கிய ஐபிஎல் திருவிழா இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 8 அணிகள் கலந்து கொண்ட இந்த தொடரில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும், அந்த வகையில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் முதல் அணியாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. இதுவரை அதிகபட்சமாக 9 வெற்றிகளை பதிவு செய்துள்ள சென்னை 18 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

மும்பை மற்றும் டெல்லி அணிகள் தலா 8 வெற்றிகள் பெற்றுள்ள நிலையில், ரன்ரேட் அடிப்படையில் மும்பை 2வது இடத்திலும் டெல்லி 3வது இடத்திலும் உள்ளன. இந்த 3 அணிகளுக்கும் இன்னும் ஒரு போட்டி மீதமுள்ள நிலையில் முதல் இரு இடங்களை பிடிப்பதில் கடும் போட்டி நிலவுகிறது. முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு இடையே நடைபெறும் முதல் குவாலிஃபயர் போட்டியில் தோற்கும் அணிக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கப்படும் நிலையில், மும்பை டெல்லி அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது. வலுவான பேட்டிங் வரிசையை கொண்ட டெல்லி அணி 6 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு அடியெடுத்து வைத்துள்ளது.

தற்போது 6 வெற்றிகளை பொற்றுள்ள ஹைதராபாத் 4வது இடத்தில் உள்ள நிலையில் அடுத்த சுற்று வாய்ப்பை இன்னும் உறுதி செய்யவில்லை. நாளை நடைபெறும் பெங்களூருக்கு எதிரான போட்டியில் ஹைதாராபாத் வெற்றி பெற்றால் மட்டுமே 4வது அணியாக ப்ளே ஆஃப் சுற்றுக்கும் முன்னேற முடியும். முதல் குவாலிஃபயர் போட்டி சென்னையில் நடைபெற உள்ள நிலையில், கோப்பைக்கான இறுதி போட்டி 12 ஆம் தேதி ஹைதராபாத்தில் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted