ஐ.பி.எல். கிரிக்கெட் - மும்பைக்கு மாற்றப்பட்ட தென் ஆப்பிரிக்க வீரர்

Oct 20, 2018 06:10 PM 434

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு அணியில் இடம் பெற்றிருந்த குயிண்டன் டி காக் ஏலத்திற்கு முன்பாக மும்பை அணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஆண்டுதோறும் நடத்தப்படும் மிகப்பெரிய போட்டித் தொடர் ஆகும். இதில் 8 அணிகள் பங்கேற்கும். வெளிநாட்டு வீரர்களும் போட்டிக்கு முன்பாக ஏலம் மூலம் எடுக்கப்படுவார்கள். அவர்கள் விளையாடும் ஆட்டத்திறனை பார்த்து அணியில் தக்க வைத்துக்கெள்ளலாமா? அல்லது கழட்டி விடலாமா? என அணி உரிமையாளர்கள் முடிவு செய்வார்கள்.

இந்த நிலையில், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி, கடந்த 2018-ம் ஆண்டு நடந்த ஏலத்தில் ரூ.2.8 கோடிக்கு ஏலம் எடுத்த தென் ஆப்பிரிக்காவின் தொடக்க விரரும், அதிரடி வீரரான குயிண்டன் டி காக்கை தற்போது மும்பை அணிக்கு மாற்றி உள்ளது அணி நிர்வாகம். எந்த தொகைக்கு அவர் ஏலம் எடுக்கப்பட்டாரோ, அதே தொகைக்கு விலை போயுள்ளார்.

ஏற்கனவே, கடந்த ஆண்டு ஏலம் நடைபெற்ற போது பெங்களூர் அணியில் முன்னணி வீரர்களாக இருந்த கிறிஸ் கெய்ல், ஷேன் வாட்சன் போன்ற மூத்த வீரர்களை கண்டுக்கொள்ளாமல் இருந்ததால் மற்ற அணி உரிமையாளர்கள் அவர்களை ஏலம் எடுத்தனர்.

2019-ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் மாதம் நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted