மகளை காதலிக்க வேண்டாம் என எச்சரிக்கை - காதலன் தந்தை படுகொலை!

Sep 10, 2020 07:38 AM 1197

திருச்சி மாவட்டம் லால்குடி பேரூராட்சி பகுதியில் வசித்து வரும், பார்த்திபன் என்பவரது மகன் ஆகாஷ். இவர், முக்காடு குமார் என்பவரது மகளை காதலித்து வந்துள்ளார்.  இதனை அறிந்த முக்காடு குமார், ஆகாஷ் மற்றும் அவரது தந்தையை கண்டித்துள்ளார். ஆனால், அந்தப் பெண்ணிடம் பழகுவதை ஆகாஷ் நிறுத்தவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த முக்காடுகுமார் மற்றும் அவரது நண்பரான பாம்புநாகராஜ் ஆகிய இருவரும் பாத்திபனை வழி மறித்து, கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு தப்பியோடினர். படுகாயமடைந்த பார்த்திபனை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது, வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தப்பியோடிய முக்காடு குமார், பாம்புநாகராஜ் ஆகியோரை தேடி வருகின்றனர்.

Comment

Successfully posted