குழந்தை, மனைவியை கொன்று விட்டு கணவன் தூக்கிட்டு தற்கொலை

Oct 15, 2018 02:31 PM 705

விருத்தாசலம் அருகே குழந்தை, மனைவியை கொன்று விட்டு கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது, சோகத்தை ஏற்படுத்தயுள்ளது.

கடலூர் மாவட்டம் இடைச்செருவாய் கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் மனைவி, குழந்தையுடன் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உணவகம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் பிரகாஷ் தனது குடும்பத்துடன் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில், இன்று காலை பிரகாஷின் வீட்டுகதவு மூடியே கிடந்ததால், சந்தேகம் அடைந்த அண்டை வீட்டார்.

கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். பிரகாஷ் தூக்கில் தொங்கிய நிலையிலும் , குழந்தை பிரதிக் ஷாவின் கை மணிகட்டு வெட்டப்பட்ட நிலையிலும், மனைவி உஷா கழுத்தை இறுக்கிய நிலையிலும் உயிரிழந்து கிடைந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

மூன்று பேரின் உடல்களையும் கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Comment

Successfully posted