ஈரோட்டில் திமுக பிரமுகர்கள் மீது கொலை மிரட்டல் புகார்

Aug 23, 2019 06:42 AM 766

ஈரோட்டில் துணிக்கடையில் பல லட்சம் மதிப்பில் ஆடைகளை வாங்கி கொண்டு பணம் தராமல் கொலை மிரட்டல் விடுவதாக திமுக பிரமுகர் மீது புகாரளிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் வீரப்பன்சத்திரம் ராமசாமி வீதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் என்பவர் துணிக்கடை நடத்தி வருகிறார். இவரிடம் திமுகவின் ஈரோடு தெற்கு மாவட்ட மாநகர இளைஞரணி அமைப்பாளர் கோட்டை ராமு மற்றும் ஈரோடு மாநகர் 51 வது வட்ட செயலாளர் ஆனந்த் ஆகியோர் வியாபாரம் செய்வதாக கூறி துணிகளை வாங்கியுள்ளனர். கடந்த 2018 ஆம் ஆண்டில் 19 லட்ச ரூபாய் மதிப்பிலான துணிகளை வாங்கிய இவர்கள் 3 லட்ச ரூபாய் பணத்தை கொடுத்துவிட்டு மீதப்பணத்தை தராமல் அலைக்கழித்துள்ளனர். இந்த நிலையில், கடந்த 17 ஆம் தேதி கோவிந்தராஜ் பணம் கேட்க சென்ற போது எங்களிடம், கட்சி செல்வாக்கு இருக்கிறது எனவும், கொலை செய்துவிடுவதாகவும் அவர்கள் மிரட்டியுள்ளனர். இதனையடுத்து மிரட்டல் விடுத்த திமுக பிரமுகர் கோட்டை ராமு மீது நடவடிக்கை எடுக்ககோரி கோவிந்தராஜ் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.

Comment

Successfully posted