சி.சி.டி.வி கேமரா உதவியால் தடுக்கப்பட்ட கொல்லை சம்பவம்

Dec 29, 2018 03:42 PM 330

பூட்டிக்கிடந்த வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையர்களை சிசிடிவி கேமரா உதவியால் பொதுமக்கள் சுற்றிவளைத்த சம்பவம் கோவை துடியலூர் அருகே நிகழ்ந்துள்ளது.

கோவை துடியலூரை அடுத்த பன்னிமடையில் ஸ்ரீனிவாச பிரபு என்பவரது வீட்டில் யாரும் இல்லை என்பதை தெரிந்து பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், பீரோவில் இருந்த 10 சவரன் நகைகளை கொள்ளை அடித்தனர்.இந்த நிலையில் பிரபு வீட்டின் சிசிடிவி கேமரா பதிவுகளை எதார்த்தமாக பார்த்த பிரபுவின் நண்பர், திருடர்கள் நடமாடுவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து பொதுமக்கள் ஒன்றிணைந்து பிரபுவின் வீட்டிற்கு சென்று கொள்ளையர்களை பிடிக்க முயன்றுள்ளனர்.தங்களை பிடிக்க பொதுமக்கள் வந்ததை அறிந்த கொள்ளையர்கள் வீட்டின் பின் வாசல் வழியாக தப்பியோடிவிட்டனர். இந்நிலையில், கொள்ளையர்கள் விட்டுச்சென்ற இருசக்கர வாகனம், அதில் இருந்த நகைகள் சிலவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர், தப்பியோடிய நபர்களை தேடி வருகின்றனர்.

Comment

Successfully posted