2மாத கைக்குழந்தை உட்பட 6 பேர் கொடூரமாக வெட்டிக்கொலை!

Apr 16, 2021 10:26 AM 901

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் 2 மாத கைக்குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


விசாகப்பட்டினம் மாவட்டம் ஜுட்டாடா (Juttada) கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தவர் ராமாராவ். இவரது வீட்டினுள் புகுந்த மர்ம நபர்கள், தூங்கிக் கொண்டிருந்த ராமராவ், அவரது மனைவி உஷாவை கொடூரமாக வெட்டிக் கொலை செய்துள்ளனர். ராமராவின் 2 வயது மகன் மற்றும் கைக்குழந்தையையும் துடிக்கதுடிக்க கொன்ற அந்த கும்பல், வீட்டில் தங்கியிருந்த உறவினர்கள் 2 பேர் என மொத்தம் 6 பேரை ஈவிறக்கமின்றி கொடூரமாக வெட்டி கொலை செய்தது. இதனால் ராமராவ் வீடு முழுவதும் ரத்த களறியாக காட்சியளித்தது. இந்த நிலையில், தகவலறிந்து வந்த காவல்துறையினர், சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

விசாரணையில் அப்பளராஜு என்பவர் கூலிப்படையுடன் சென்று இந்த படுகொலையை நிகழ்த்தியது தெரியவந்தது. அப்பளராஜுவின் மகளை ராமராவ் குடும்பத்தை சேர்ந்த நபர் பாலியல் வன்கொடுமை செய்து தலைமறைவாகி உள்ளார். மகளை பாலியல் வன்கொடுமை செய்ததற்கு பழிவாங்க அப்பளராஜு, ராமராவ் குடும்பத்தை வெட்டி சாய்த்தது விசாரணையில் தெரியவந்ததுள்ளது. தலைமறைவான கொலையாளிகளை போலீசார் தேடி வரும் நிலையில், இந்த படுகொலை அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Comment

Successfully posted