நடிகர் விஜய்சேதுபதி ரசிகர்மன்றத் தலைவர் வெட்டிக்கொலை - புதுச்சேரியில் சோகம்!

Oct 05, 2020 10:11 AM 668

புதுச்சேரியில், நடிகர் விஜய் சேதுபதியின் ரசிகர் மன்ற தலைவரை, மர்ம நபர்கள் வெட்டிப் படுகொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி கோவிந்தசாலை பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் விஜய் சேதுபதி ரசிகர் மன்ற தலைவராக இருந்து வந்தார். இந்நிலையில், நெல்லித்தோப்பு அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த மணிகண்டனை, மர்ம நபர்கள் 4 பேர் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது.

இது குறித்து தகவலறிந்த உருளையன்பேட்டை போலீசார், உயிருக்கு போராடி கொண்டிருந்த மணிகண்டனை உடனடியாக மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும், கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, வழக்குப் பதிந்து, தப்பியோடிய மர்ம கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Comment

Successfully posted