ஆண் தேவதை படத்தின் இயக்குனருக்கு கொலை மிரட்டல்

Oct 22, 2018 03:37 PM 927

விநியோகஸ்தர் சங்கம் தங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஆண் தேவதை படத்தின் இயக்குநர் புகார் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் சமுத்திரக்கனி நடிப்பில் கடந்த மாதம் 12 ஆம் தேதி வெளியான திரைப்படம் ஆண் தேவதை. தாமிரா என்பவர் இயக்கிய இப்படத்தில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக ரம்யா பாண்டியன் நடித்திருந்தார். இந்நிலையில், 41 லட்சம் ரூபாய் முன் பணம் கொடுத்த ஆர்.எஸ்.எம் நிறுவனம் திரையரங்க உரிமையை பெற்றுக்கொண்டது.

இதனையடுத்து, ஆர்.எஸ்.எம் நிறுவனத்துக்கு ஏற்கனவே இருந்த கடன் காரணமாக படத்தை வெளியிடாமல் விநியோகஸ்தர் சங்கம் தடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இது தொடர்பாக பேச்சு வார்த்தையில் ஈடுபடும் போது விநியோகஸ்தர்கள் தங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் தெரிவித்துள்ளார்.

திரையரங்கில் வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தை திரையிட விடாமல் விநியோகஸ்தர் சங்கம் தடுப்பதாக கூறியுள்ளார். படத்தை வெளியிட தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Comment

Successfully posted