சேலத்தில் வேலை செய்து வந்த வட மாநில நபர் குடும்பத்துடன் கொலை

Mar 09, 2020 10:31 AM 766

சேலம் வெள்ளி பட்டறையில் வேலை செய்து வந்த கணவன், மனைவி உட்பட மூவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆக்ராவை சேர்ந்த ஆகாஷ், அவரது மனைவி வந்தனா மற்றும் ஆகாஷின் அண்ணன் மகன் சன்னி ஆகியோர் சேலத்திலுள்ள வெள்ளிப்பட்டறையில் ஒரு வாரத்திற்கு முன்பு வேலைக்கு சேர்ந்துள்ளனர். இவர்களது வீட்டில் இருந்து இரவு நேரத்தில் குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்த போது ஆகாஷ் அவரது மனைவி மற்றும் அண்ணன் மகன் ஆகியோர் சடலமாக கிடந்தனர். விசாரணையில், ஆக்ராவை சேர்ந்த வினோத், தினேஷ், சுராஜ், விஜி ஆகியோர் ஆகாஷ் வேலை செய்து வந்த வெள்ளிப் பட்டறையில் வேலை செய்து வந்ததும், ஆகாஷ் தங்கியிருந்த வீட்டின் அருகே தங்கியிருந்த அவர்கள் 4 பேரும் தலைமறைவானதும் தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவான 4 பேரை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

Comment

Successfully posted