8 வயதில் இசையில் சாதனை படைத்த சிறுவன்

Mar 15, 2019 08:33 AM 83

ஏ.ஆர்.ரகுமானின் இசைப்பள்ளியில் பயின்று வரும் 8 வயது சிறுவன் ஒருவன், அமெரிக்காவில் நடைபெற்ற இசைப் போட்டியில் 7 கோடி ரூபாய் பரிசை வென்றுள்ளான்.

8 வயதே ஆன லிடியனின் கை விரல்கள் பியானோ இசைக்கருவியில் புகுந்து விளையாடுகின்றன.சென்னை கோயம்பேட்டில் உள்ள ஏஆர் ரகுமான் இசைப்பள்ளியில் லிடியன் இசை பயின்று வருகிறார். அமெரிக்காவில் நடைபெற்ற வேர்ல்டு பெஸ்ட் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பியானோ வாசித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். அந்த நிகழ்ச்சியில் அவரே வெற்றியாளராகவும் இருந்து 7 கோடி ரூபாய் பரிசையும் வென்றுள்ளார். லிடியனை அறிமுகப்படுத்தி பேசிய ஏ.ஆர்.ரகுமான், எதிர்காலத்தில் இந்தியாவின் இசை தூதுவராக லிடியன் இருப்பார் என நம்பிக்கை தெரிவித்தார்.

Comment

Successfully posted