அம்மா அரசின் சாதனைகள் தொடர அதிமுகவிற்கு வாக்களிக்க வேண்டும்: சேவூர் ராமசந்திரன்

Apr 16, 2019 10:13 AM 73

தமிழகத்தில் அம்மா அரசின் சாதனைகள் தொடர அதிமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று அமைச்சர் சேவூர் ராமசந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் அதிமுக வேட்பாளர் செஞ்சி ஏழுமலையை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமசந்திரன், பல்வேறு தரப்பினரும் பயன்பெறும் வகையில் அதிமுக அரசு நலத் திட்டங்களை வழங்கியுள்ளதாக குறிப்பிட்டார்.

இந்த சாதனை ஆட்சி தொடரவும், மக்கள் பாதுகாப்புடன் வாழவும் அனைவரும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க அவர் கேட்டுக் கொண்டார். முனுக்கப்பட்டு, சீசமங்கலம், மேல்மட்டை, விண்ணமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் அவர் பிரசாரம் செய்தார்.

Comment

Successfully posted