பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 112வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு டிஜிபி ஜெயந்த் முரளி ஆய்வு

Oct 20, 2019 07:17 PM 241

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 112வது ஜெயந்தி விழா முன்னிட்டு, பசும்பொன் கிராமத்தில் கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி ஆய்வு செய்தார்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 112வது ஜெயந்தி விழாவும், 57வது குருபூஜை விழாவும் வரும் 30ந் தேதி நடைபெற உள்ள நிலையில், பசும்பொன் கிராமத்தில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி, தென் மண்டல ஐஜி சண்முக ராஜேஸ்வரன் உட்பட காவல்துறை உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி, விழாவின் போது 10 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருப்பதாக தெரிவித்தார். குற்றச் செயல்களை தடுக்க ஆளில்லா விமானம் மூலம் கண்காணிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

Comment

Successfully posted