முத்துராமலிங்க தேவரின் 111-வது ஜெயந்தி விழா -தமிழக அரசு சார்பில் முதல்வர், துணை முதல்வர் மரியாதை

Oct 30, 2018 10:45 AM 650

தேசியம் தனது உயிர், தெய்வீகம் தனது உடல் என்று வாழ்ந்து காட்டியவர் முத்துராமலிங்க தேவர் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புகழாரம் சூட்டினார்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 111-வது ஜெயந்தி விழா மற்றும் 56-வது குருபூஜை விழா இன்று நடைபெறுகிறது. இந்தநிலையில் தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தேசியம் தனது உயிர், தெய்வீகம் தனது உடல் என்று வாழ்ந்து காட்டியவர் முத்துராமலிங்க தேவர் என்று புகழாரம் சூட்டினார். பசும்பொன்னில் தேவருக்கு தங்க கவசம் அணிவித்து, ஒவ்வொரு ஆண்டும் அ.தி.மு.க மரியாதை செலுத்தி வருவதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் தேவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர். இதனால் 4 டி.ஐ.ஜிக்கள் உட்பட 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Comment

Successfully posted