காதலியின் ஊருக்கு சென்ற காதலன் காரை தாக்கிய மர்ம கும்பல்

Nov 12, 2019 12:49 PM 156

காதலிக்கும் பெண்ணின் ஊருக்கு உறவினர்களுடன் சென்ற காதலனின் காரை இளைஞர்கள் கும்பல் ஒன்று அடித்து நொறுக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

சேலம் மாவட்டம் செட்டிப்பட்டியைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன், ஊமைகவுண்டம்பட்டி காலனியைச் சேர்ந்த உறவுக்காரப் பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர் தனது உறவினர்களுடன் காதலியின் வீட்டிற்கு சென்ற போது, வழிமறித்த இளைஞர்கள் கும்பல் ஒன்று அவரது காரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் ஹரிகிருஷ்ணனின் கார் முற்றிலும் சேதமடைந்தது. சம்பவம் குறித்து ஹரிகிருஷ்ணனின் தந்தை அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் இளைஞர்கள் கும்பல் ஒன்று ஹரிகிருஷ்ணனின் காரை அடித்து நொறுக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இந்த பதிவுகளை கொண்டு காவல்துறையினர் இளைஞர்களை தேடி வருகின்றனர்.

Comment

Successfully posted