பழைய இரும்புக் கடையை சூறையாடிய 8 பேர் கொண்ட மர்ம கும்பல்

Oct 08, 2019 09:42 AM 140

சென்னையை அடுத்த பொழிச்சலூரில் உள்ள இரும்புக் கடையை அடித்து நொறுக்கிய மர்ம கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

கவுல் பஜார் பிரதான சாலையில், கஜா மொய்தீன் என்பவர் பழைய இரும்புக் கடை நடத்தி வந்தார். இவருடைய இரும்புக் கடைக்குள் புகுந்த 8 பேர் கொண்ட மர்ம கும்பல் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால், அங்கிருந்தவர்களை சரமாரியாகத் தாக்கினர். கடையில் நிறுத்தப் பட்டிருந்த வாகனங்களை அந்த கும்பல் சூறையாடினர். இந்த காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளன.

தாக்குதல் குறித்து இரும்புக் கடை உரிமையாளர் காஜா மொய்தீன் அளித்த புகாரை தொடர்ந்து, காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தாக்குதல் நடத்திய கும்பல் வந்த இருசக்கர வாகனங்களின் பதிவு எண் போலியானது என்பது தெரியவந்தது. தாக்குதலுக்கான காரணம் குறித்தும், மர்ம நபர்கள் குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comment

Successfully posted