மதுபான விடுதிகளில் மர்ம நபர்கள் கொடூர தாக்குதல்

Feb 20, 2020 08:45 AM 214

ஜெர்மனியின் ஹனாவ் நகரில் மதுபான விடுதியில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில், 8 பேர் உயிரிழந்தனர்.


ஹனாவ் நகரில் உள்ள பிரபல மதுபான விடுதிக்கு காரில் வந்த மர்ம நபர்கள் சிலர், கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த கொடூர தாக்குலில், 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து அங்கிருந்து தப்பிய மர்ம நபர்கள், அருகே உள்ள மற்றொரு மதுபான விடுதிக்குள் சென்று  நடத்திய தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். மேலும், இத்தாக்குதலில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து காவல்துறையினர் வருவதற்குள், மர்ம நபர்கள் தப்பியோடிவிட்டனர். இதையடுத்து தாக்குதல் நடத்தியவர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Comment

Successfully posted