முகப்பேரில் காவல்துறையினரின் வாகனத்தை இடித்து தள்ளி தப்பிச் சென்ற மர்ம நபர்கள்

Oct 07, 2019 02:01 PM 141

சென்னை முகப்பேரில் நீண்ட நேரமாக மர்மான முறையில் நின்றிருந்த கார், காவல்துறையினரின் வாகனத்தை இடித்து தள்ளி தப்பிச் சென்ற சம்பவத்தில் மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

எபனேசர் தெருவில் சொகுசு கார் ஒன்றில் மூன்று பேர் கொண்ட கும்பல் அப்பகுதியில் நீண்ட நேரமாக நின்றுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த அந்த பகுதி மக்கள் காரை தட்டியும் மர்ம நபர்கள் திறக்காததால் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதனடிப்படையில் அங்கு சென்ற காவல்துறையினர் காரை திறக்க முற்பட்டபோது, மர்ம நபர்கள் சொகுசு காரை வேகமாக காவல்துறையினரின் வாகனத்தின் மீது மோதிவிட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டு மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Comment

Successfully posted