ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு

Feb 12, 2020 06:40 AM 416

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ மீது, மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திள்ளது.

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மகத்தான வெற்றி பெற்றுள்ளது. அக்கட்சியின் சார்பில் நரேஷ் யாதவ் மெஹ்ராலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இதையடுத்து, மெஹ்ராலி பகுதியில் உள்ள கோயிலுக்கு சென்று வழிபட்ட அவர், கட்சியினருடன் காரில் திரும்பிய போது, கிஷன்கர் பகுதியில் மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

இதில் எம்.எல்.ஏ நரேஷ் யாதவ் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.  இந்த தாக்குதலில் அக்கட்சியை சேர்ந்த ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொருவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comment

Successfully posted