பிரசாரத்தில் ஈடுபட்ட கமல் மீது செருப்பு வீசிய மர்ம நபர்

May 16, 2019 07:07 AM 524

திருப்பரங்குன்றத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட நடிகர் கமல் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்து தீவிரவாதம் குறித்து பேசிய கமல், கடும் எதிர்ப்பு காரணமாக கடந்த இரண்டு நாட்களாக பிரசாரம் செய்யவில்லை. இந்த நிலையில் திருப்பரங்குன்றத்தில் கமல் பேசிக்கொண்டிந்த போது மர்ம நபர் ஒருவர் அவர் மீது செருப்புகளை வீசினார். ஆனால் அந்த செருப்புகள் அவர் மீது படாமல் கேமரா மேன் ஒருவர் மீது பட்டு கீழே விழுந்தது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதேபோல், மக்கள் நீதி மயத்தின் நிறுவன தலைவர் நடிகர் கமல்ஹாசனை கண்டித்து மதுரையில் இந்து முன்னணி அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

Comment

Successfully posted