தம்பி படத்தில் அண்ணன் நடித்த படத்தின் டீசர்...

Feb 11, 2019 02:54 PM 270

கார்த்தி நடித்த 'தேவ்' படம் பிப்ரவரி 14ந் தேதி திரைக்கு வருகிறது. ராஜத் ரவிசங்கர் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார், வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரசிகர்களுக்கு இடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் 'NGK' படத்தின் டீசர், பிப்ரவரி 14ந் தேதி வெளியாகிறது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தின் டீசர் தேவ் படம் வெளியாகும் திரையரங்கில் ஒளிப்பரப்பு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தம்பி படத்தில் அண்ணன் நடித்த படத்தின் டீசர் வெளியாவதால் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.

Comment

Successfully posted