“என்ஜிகே” எமோஜியை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய படக்குழு

May 21, 2019 10:22 AM 424

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா, ரகுல் பிரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் “என்ஜிகே”. இந்த படம் வரும் மே 31ம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் இந்த படத்தினை கொண்டாட தயாராகி வருகிறார்கள். இதன் உச்சமாக நடிகர் சூர்யாவிற்கு இந்தியாவிலேயே முதல்முறையாக 200 அடிக்கு மேல் கட்அவுட் வைத்து சாதனைப் படைக்க தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில் இவர்களை உற்சாகப்படுத்தும் வண்ணம் நடிகர் சூர்யா சட்டையின் காலரை உயர்த்தி பிடித்தபடி மேலே பார்த்துக்கொண்டிருக்கும் எமோஜியை டிவிட்டரில் என்ஜிகே படக்குழு வெளியிட்டுள்ளது. இதனை முன்னிட்டு நடிகர் சூர்யா டிவிட்டரில் நேரலையில் வந்து ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார். மேலும் #NGK #NGKFromMay31 #NGKFire உள்ளிட்ட ஹேஷ்டேக்குகளுக்கு எமோஜிக்களும் தயாராகி வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே விஜய்யின் “மெர்சல்”, ரஜினியின் “காலா” படங்களுக்கும் அப்படக்குழு சார்பாக எமோஜிக்கள் வெளியிடப்பட்டு ட்ரெண்டானது குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted