சீமானின் தந்தை மறைவுக்கு எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி இரங்கல்

May 13, 2021 09:27 PM 519

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை மறைவுக்கு எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், சீமானின் தந்தை செந்தமிழன் உடல்நலக்குறைவால் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

தந்தையை இழந்து வாடும் சீமானுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Comment

Successfully posted