ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் நடால், பியான்கா ஆண்ட்ரீஸ்கு சாம்பியன்

Aug 13, 2019 03:47 PM 152

கனடாவில் நடைபெற்ற ரோஜர்ஸ் கோப்பை ஏடிபி மற்றும் டபிள்யுடிஏ டென்னிஸ் போட்டியில் நடால், பியான்கா ஆண்ட்ரீஸ்கு ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றனர்.

மாண்ட்ரியலில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிபோட்டியில், ஸ்பெயினின் ரஃபேல் நடால் 6 க்கு 3, 6 க்கு பூஜ்ஜியம் என்ற நேர் செட்களில், ரஷ்யாவின் டானில் மெட்வதேவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். இது அவர் வெல்லும் 35வது மாஸ்டர்ஸ் பட்டமாகும். இதேபோல், மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் கனடாவின் பியான்கா ஆண்ட்ரீஸ்குவுடன் மோதிய அமெரிக்க நட்சத்திரம் செரீனா வில்லியம்ஸ், முதல் செட்டில் 1 க்கு 3 என பின்தங்கிய நிலையில், காயம் காரணமாக விலகினார். இதனால், பியான்கா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

Comment

Successfully posted