சி.பி.ஐ அதிகாரி இடமாற்றம்: உச்சநீதிமன்றத்தில் நாகேஸ்வர ராவ் மன்னிப்பு கோரினார்

Feb 12, 2019 07:08 AM 678

சிபிஐ அதிகாரியை இடமாற்றம் செய்த விவகாரத்தில், உச்சநீதிமன்றத்தில் சிபிஐ முன்னாள் இடைக்கால இயக்குநர் நாகேஸ்வர ராவ் மன்னிப்பு கோரினார்.

பீகாரில் காப்பக சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பான வழக்கை சிபிஐ அதிகாரி, ஏ.கே. சர்மா விசாரணை நடத்தி வந்தார். அவரை சி.ஆர்.பி.எப் படைப்பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்து நாகேஸ்வர ராவ் உத்தரவிட்டிருந்தார். இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், நாகேஸ்வர ராவ், பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார்.

அதில் தமது தவறை உணர்ந்து விட்டதாக குறிப்பிட்டிருந்த அவர், பீகாரில் காப்பக வழக்கில், உச்சநீதிமன்ற உத்தரவை மீற வேண்டும் என்று எந்தவித உள்நோக்கமும் கிடையாது என்று தெரிவித்துள்ளார்.

Comment

Successfully posted