நகம் வெட்டுவதிலிருந்து தப்பிக்க நடிக்கும் நாயின் தந்திரம்

Sep 11, 2019 08:07 AM 75

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நகம் வெட்டுவதில் இருந்து தப்பிக்க, மயக்கமடைந்து விழுவது போல் நாய் ஒன்று நடிக்கும் நாடகம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நம் அன்றாட வாழ்க்கையில் நம்மை சுற்றி பல நிகழ்வுகள் நடக்கின்றன. இணையம் வந்த பிறகு எந்த வீடியோ வைரல் ஆகிறது என்பதை யாராலும் கணிக்க முடிவதில்லை. அந்த வகையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த ரஷோனா என்ற பெண் தன் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த வீடியோவில், தான் வளர்க்கும் நாயின் நகத்தை வெட்ட தயாரானார். முன்னங்காலைத் தருமாறு கேட்டும் கண்டுகொள்ளாதது போல் நின்ற நாய், நகம் வெட்ட முயற்சிக்கும் போது திடீரென கண்களை மூடி தலையை பின்னோக்கி சாய்த்தது.

பின், கால்களை மேலே நீட்டியபடி தரையில் விழுந்த நாய் நிஜமாகவே மயங்கியது போல் பாவித்தது. தரையில் விழுந்ததும் தன் நடிப்பை யாரேனும் கவனிக்கிறார்களா? என்பதைக் காண கண்களை பக்கவாட்டில் உருட்டிப் பார்த்ததும்தான் அது நடிப்பு என்பதையே உணர முடிந்தது.

நகம் வெட்டுவதைத் தவிர்க்க நாய் மேற்கொண்ட நடிப்பை, அதன் உரிமையாளர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கும் ரஷோனா, இது தான் இந்த ஆண்டின் சிறந்த நடிப்பு என பதிவிட்டுள்ளார். இதற்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம் என இணயவாசிகள் தெரிவித்து வருகின்றனர். இந்த காட்சி தற்போது இணயத்தில் வைரலாகி வருகிறது.

Comment

Successfully posted