நாமக்கல் குழந்தை விற்பனை வழக்கில் 7 பேருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

May 24, 2019 10:02 PM 87

பச்சிளம் குழந்தைகள் விற்பனை வழக்கில் சிறையில் உள்ள 7 பேருக்கு ஜூன் 6-ம் தேதி வரை காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதியில் பச்சிளம் குழந்தைகளை விற்பனை செய்தது தொடர்பான வழக்கினை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் இதுவரை அமுதா உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகேசன், அருள்சாமி, பர்வீன், ஹசீனா, லீலா, செல்வி, சாந்தி ஆகிய 7 பேரின் நீதிமன்றக் காவல் முடிவடைவடைந்ததால் அவர்களை நாமக்கல் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். நீதிபதி வடிவேல் 7 பேருக்கும் ஜூன் மாதம் 6 ம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து 7 பேரும் சேலம் மத்திய சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டனர்.

Comment

Successfully posted