நாமக்கல் சிறுமி பாலியல் வழக்கு - மேலும் ஒருவர் கைது!

Oct 14, 2020 03:40 PM 731

நாமக்கல் மாவட்டத்தில் 2 சிறுமிகளுக்கு பாலியல் கொடுமை செய்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் அணைப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பழனியம்மாள் என்பவருக்கு 13 வயதில் ஒரு மகளும், 12 வயதில் ஒரு மகளும் உள்ளனர். கணவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டநிலையில், ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்ட பழனியம்மாள், குடும்பத்தை நடத்துவதற்காக இரு மகள்களையும் வீட்டில் தனியாக விட்டுவிட்டு வேலைக்கு சென்று வருகிறார். சிறுமிகள் வீட்டில் தனியாக இருப்பதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட காமக் கொடூரர்கள் விவரமறியாத சிறுமிகளை மிரட்டி கடந்த 6 மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர். ஊர் மக்கள், மற்றும குழந்தை நல அதிகாரிகளின் விசாரணைக்குப் பின்னர் இந்த கொடுமையாக சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. சிறுமிகள் அளித்த தகவலின்பேரில், 75 வயது முதியவர் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் சிலருக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு உள்ளதா என போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், 55 வயதான பெரியசாமி என்பவரும் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்த நிலையில், அவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

Comment

Successfully posted