பிரதமர் மோடிக்கு ரஷ்ய நாட்டின் உயரிய விருது அறிவிப்பு

Apr 13, 2019 09:43 AM 140

ரஷ்ய நாட்டின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான "புனித ஆண்ட்ரூ" விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்படுவதாக அந்நாடு அறிவித்துள்ளது.

இந்திய - ரஷ்ய ஆகிய இருநாடுகளுக்கிடையேயான உறவை மேம்படுத்த சிறப்பாக பணியாற்றியது மற்றும் ரஷியாவுடன் நெருக்கமான நட்புறவைப் பேணியது ஆகியவற்றைப் பாராட்டி பிரதமர் நரேந்திர மோடிக்கு புனித ஆண்ட்ரூ விருதை வழங்கப்படுவதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளார். இதற்காக ரஷ்ய அதிபர் புதினுக்கு, பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

இந்தியா- ரஷ்யா இடையிலான நட்புறவு ஆழமானது என்றும், வருங்காலத்தில் இது மேலும் வலுப்பெறும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடிக்கு ஐ.நா சபை மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து இதுவரை 8 சர்வதேச விருதுகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted