வெள்ளுடையில் நடராஜன்! - சவால்களை எதிர்கொள்ள தயார் என ட்வீட்!

Jan 05, 2021 12:34 PM 14693

தமிழ்நாட்டை சேர்ந்த வேகப்பந்து வீச்சார் நடராஜன், இந்திய அணியின் டெஸ்ட் சீருடை அணிந்து கொண்டு எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் 2-வது போட்டியில் வேகபந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் காயம் காரணமாக விலகினார். இதையடுத்து மீதமுள்ள டெஸ்ட் போட்டியில், அவருக்கு பதில் தமிழ்நாட்டு வீரர் நடராஜன் விளையாட உள்ளார்.

image

இந்த நிலையில், இந்திய அணியின் டெஸ்ட் சீருடை அணிந்து கொண்டு எடுத்த புகைப்படத்தை நடராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்திய அணியின் டெஸ்ட் சீருடையை அணிந்துருப்பது பெருமையாக உள்ளது என குறிப்பிட்டுள்ள நடராஜன், சவால்களை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, இந்திய அணியின் டெஸ்ட் சீருடை அணிந்து கொண்டு நடராஜன் எடுத்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

 

Comment

Successfully posted