இலங்கை குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணை

Jun 16, 2019 10:12 AM 55

கோவையை தொடர்ந்து மதுரையில் தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கை குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினருடன் சமூக வலைதளங்களில் தொடர்பு வைத்திருந்தவர்களை தேசிய புலனாய்வு அமைப்பினர் குறிவைத்துள்ளனர். இது தொடர்பாக கோவையில் கடந்த சில நாட்களாக முகாமிட்டிருந்த அவர்கள், உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது உசேன், ஷாஜகான், சேக் சபியுல்லா ஆகியோரை உபா சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்கள் மூவரையும் வரும் 28 ம் தேதி வரை காவலில் வைக்க கோவை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் கோவையில் கைது செய்யப்பட்டவர்களுடன் தொலைபேசி முலம் தொடர்பு வைத்திருந்த மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த சதக் அப்துல்லா என்பவரிடம் தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரையில் 3 இடங்களில் நள்ளிரவு முதல் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Comment

Successfully posted