தேசியப் பாதுகாப்பு படையின் 35வது ஆண்டு விழா கொண்டாட்டம்: மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்பு

Oct 15, 2019 06:31 PM 98

பயங்கரவாதம் என்னும் கொடிய நஞ்சால் உலகின் வேறெந்த நாடுகளையும் விட இந்தியா அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

தேசியப் பாதுகாப்புப் படையின் எனப்படும் என்.எஸ்.ஜியின் 35ஆவது நிறுவன நாளையொட்டி, அரியானா மாநிலம் மானேசரில் உள்ள தேசியப் பாதுகாப்புப் படை தலைமையகத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் தீ வளையங்களைத் தாண்டுதல், தற்காப்பு கலைகள் உள்ளிட்ட பல்வேறு சாகசங்களை நிகழ்த்திக் காட்டினர். பயங்கரவாதிகளால் பிடிக்கப்படும் பேருந்தை மோப்ப நாய்களின் துணையுடன் ஹெலிகாப்டர் மற்றும் வாகனங்கள் மூலம் மீட்பது போன்ற காட்சிகளை செய்து காட்டினர். குறிப்பாக வெடிகுண்டுகளை ரோபோக்கள் மூலம் பாதுகாப்பாக அகற்றிய ஒத்திகை பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

Comment

Successfully posted