தேசிய பெண்கள் தினம்: செஞ்சியில் சிறப்பு விழிப்புணர்வு முகாம்

Feb 01, 2019 08:10 PM 1352

செஞ்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில், தேசிய பெண்கள் தினத்தை முன்னிட்டு, பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது.

தேசிய பெண்கள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு விழிப்புணர்வு முகாம் மற்றும் பேரணிக்கு, செஞ்சி குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் ஜமுனாபாய் தலைமை தாங்கினார். இந்த விழிப்புணர்வு முகாமில், விழுப்புரம் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் மருத்துவர் பாலுசாமி கலந்துக் கொண்டு, சிறப்புரையாற்றி, சிறப்பாக செயல்பட்ட அங்கன்வாடி பணியாளர்களுக்கும், குழந்தைகளுக்கும் பரிசுகளை வழங்கினார்.

அப்போது, பெண் சிசுக் கொலைகள் தடுப்பு, பெண் குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சி, பெண் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் கல்வியின் அவசியத்தையும் எடுத்துக் கூறி, ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.

Comment

Successfully posted