நாகர்கோவிலில் நடைபெற்ற தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி

Feb 17, 2020 08:09 AM 328

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நடைபெற்ற தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சியில், 300க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்றுள்ளன.

கன்னியாகுமரி கேனல் கிளப் சார்பில், நாகர்கோவிலில் 17 மற்றும் 18-வது தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி நேற்று தொடங்கியது. 2 நாள் நடைபெறும் இந்த கண்காட்சியில், ஜெர்மன் ஷெப்பர்டு, லேப்ரடார், கோல்டன் ரெட்ரிவர் 300 நாய்கள் பங்கேற்றுள்ளன.

இந்த நிகழ்ச்சியில், தமிழகம் மட்டுமின்றி, கோவா, மும்பை, டெல்லி போன்ற பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நாய்கள் பங்கேற்றுள்ளன. நாய்களுக்கு பல பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றிபெறும் 8 நாய்களுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளன.

Comment

Successfully posted