நாவலர் நெடுஞ்செழியனின் பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப்படும்- துணை முதலமைச்சர்

Jul 11, 2019 08:55 PM 59

நாவலர் நெடுஞ்செழியனின் 100-வது பிறந்தநாள் விழாவை அரசு விழாவாக கொண்டாட, தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன், நாவலர் நெடுஞ்செழியன் கட்சிகளுக்கு அப்பாற்பட்டவர் என்றும், அவரது 100-வது பிறந்தநாள் விழாவை தமிழக அரசு சார்பில் சிறப்பாக கொண்டாட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதிலளித்த அவை முன்னவரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், நாவலர் நெடுஞ்செழியனை சிறப்பிப்பது தொடர்பாக முதலமைச்சருடன் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும் என்றார். நாவலர் நெடுஞ்செழியனின் 100-வது பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடுவது குறித்து முதலமைச்சர் விரைவில் அறிவிப்பார் என்றும் பேரவையில் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

Comment

Successfully posted