நவராத்திரி விழாவை முன்னிட்டு விதை கொலு சிலைகள் விற்பனை

Sep 25, 2019 03:27 PM 427

நவராத்திரி விழாவை முன்னிட்டு கொலு வைக்க, விதைகளால் ஆன சிலைகள் விற்கப்பட்டு வருகின்றன. ஒன்பது நாட்கள் நடைபெறும் நவராத்திரி விழாவை முன்னிட்டு சென்னை அடுத்த திருவள்ளூரில் விதைகளால் உருவாக்கப்பட்ட சுவாமி சிலைகள், தோட்டக்கலைத்துறை சார்பில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. மாதவரம் தோட்டக்கலை பூங்கா, சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள தோட்டக்கலைத் துறை இயக்குனர் அலுவலகம், தேனாம்பேட்டை செம்மொழி பூங்கா உள்ளிட்ட இடங்களில் இத்தகைய விதை கிருஷ்ணர் சிலைகள் விற்பனையை தமிழக தோட்டக்கலைத்துறை துவக்கியுள்ளது. இத்தகைய விதை சிலைகளை நீரில் கரைக்கும் போது, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத, வீட்டுக்கும் பயன் தரும் என்பதால் கிருஷ்ணர் சிலைக்கு மக்களிடம் பெரும் வரவேற்பு உள்ளது.

Comment

Successfully posted