நவராத்திரி விற்பனைக் கண்காட்சியில் ஏராளமான பொருட்கள் விற்பனை

Sep 21, 2019 07:39 AM 312

சென்னையில் மகளிர் சுய உதவிக் குழுக்களை ஊக்குவிக்கும் விதமாக நடந்து வரும், நவராத்திரி விற்பனைக் கண்காட்சியை ஏராளமானோர் ஆர்வமுடன் பார்ப்பதோடு, பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்காட்சி நடைபெற்று வருகிறது. கடந்த செப்டம்பர் 18ம் தேதி அமைச்சர் எஸ்.பி வேலுமணி இந்த நவராத்திரி கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். இதில், நூற்றுக்கணக்கான மகளிர் சுய உதவிக் குழுக்கள் தங்களின் உற்பத்திப் பொருட்களை விற்பனைகாக வைத்துள்ளனர். ஆடை அணிகலன்கள், தானியங்கள், அழகு சாதனங்கள், கைவினைப் பொருட்கள், உணவுப் பொருட்கள் உள்ளிட்டவைகள் மலிவு விலையில் விற்கப்படுவதால் வாடிக்கையாளர்கள் பெருமளவில் வந்து வாங்கிச் செல்கின்றனர்.

மகளிர் மேம்பாட்டிற்காக தமிழக அரசு எடுத்துவரும் இதுபோன்ற நடவடிக்கைகள் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு, மேலும், ஊக்கம் அளிப்பதாக தமிழக அரசுக்கு மகளிர் சுய உதவிக்குழுக்கள் நன்றி தெரிவித்தனர்.

Related items

Comment

Successfully posted