பெரம்பலூர் அருகே கள்ளக் காதலியை அரிவாளால் வெட்டிய, கள்ளக் காதலன்

Oct 20, 2019 06:02 PM 193

பெரம்பலூர் அருகே கள்ளக் காதலியை அரிவாளால் வெட்டிய, கள்ளக் காதலனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி கிராமத்தை சேர்ந்த பழனிச்சாமி வெளிநாட்டில் வேலை செய்த போது, இவரது மனைவி பச்சையம்மாளுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் இவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் பச்சையம்மாளின் கணவர் பழனிசாமிக்கு தெரிய வரவே, மனைவியை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். இதனிடையே வேலைக்கு சென்ற பச்சையம்மாளிடம், கள்ளக் காதலன் செந்தில்குமார் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பச்சையம்மாளின் கழுத்தில் வெட்டி விட்டு தலைமறைவாகி விட்டார். பச்சையம்மாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், கள்ளக் காதலனை தேடி வருகின்றனர்.

Comment

Successfully posted