வேதாரண்யம் அருகே ‘மத்தி’ மீன்கள் நல்ல விலைக்கு போவதால் மீனவர்கள் மகிழ்ச்சி

Nov 01, 2019 02:58 PM 279

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகேயுள்ள மீனவர் கிராமத்தில் மத்தி மீன்கள் நல்ல விலைக்கு போவதால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வேதாரண்யத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் உள்ள மீனவர்கள், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், குறுகிய தூரத்திற்கு சென்று மீன் பிடித்து வருகின்றனர். இதில் புட்பவனம் மீனவர்கள் கரையோரம் சென்று மீன் பிடிப்பதில், நாள் ஒன்றுக்கு 10 டன்னுக்கு குறையாமல் மத்தி மீன்களை பிடித்து வருகின்றனர். மேலும் மத்தி மீன்கள் 130 ரூபாயில் இருந்து 150 ரூபாய் வரை விலை போவதால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Comment

Successfully posted