நீட் ஆள்மாறாட்ட வழக்கு: மாணவன் உதித் சூர்யாவிற்கு ஜாமீன்

Oct 17, 2019 03:35 PM 92

நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவன் உதித் சூர்யாவிற்கு ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தேனி மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்று வந்த மாணவர் உதித் சூர்யா மற்றும் அவரது தந்தை ஆகியோர் நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்தது தொடர்பாக கைது செய்யப்பட்டனர். இதில் மாணவர் உதித் சூர்யா சார்பில் முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், உதித் சூர்யா மற்றும் அவரது தந்தையிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

இந்தநிலையில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மாணவர் உதித் சூர்யா சார்பில் ஜாமின் கோரி மனு அளிக்கப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, மாணவனின் வயதைக் கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்குவதாக நீதிபதி தெரிவித்தார். தினமும் மதுரை சிபிசிஐடி அலுவலகத்தில் காலை 10.30 மணிக்கு ஆஜராகி உதித் சூர்யா கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, அவரது தந்தைக்கு ஜாமீன் வழங்க முடியாது என்றும் கூறினார்.

Comment

Successfully posted