நேரு பிறந்தநாள் விழா - உருவப்படத்திற்கு ஆளுநர், துணை முதலமைச்சர் மரியாதை

Nov 14, 2018 11:49 AM 312

ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளையொட்டி, சென்னை கத்திபாராவில் உள்ள அவரது சிலைக்கு கீழ் உள்ள படத்திற்கு, ஆளுநர் பன்வாரிலால் புரோகித், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 130-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை கத்திபாராவில், அவரது திருவுருவச் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள படத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இதைத்தொடர்ந்து அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ஜெயகுமார், பெஞ்சமின் உள்ளிட்டோரும் நேருவின் திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தினர்.

Comment

Successfully posted

Super User

super