நெல்லையப்பர் கோவிலில் காந்திமதி அம்பாள் திருக்கல்யாண திருவிழா கோலாகலம்

Oct 26, 2019 02:54 PM 134

நெல்லையில் உள்ள நெல்லையப்பர் ஆலையத்தில் காந்திமதி அம்மன் திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடைபெற்றது.

அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 15ம் தேதி கொடிஏற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலை காந்திமதி அம்மன் வீதி உலா நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து இன்று அதிகாலை 4 மணிக்கு அம்மன் சன்னதியில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமி - அம்பாள் திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து 3 நாட்களுக்கு ஊஞ்சல் விழா நடைபெறுகிறது.

Comment

Successfully posted