மாஸ்டர் படம் குறித்த புதிய அறிவிப்பு!

Feb 11, 2020 06:26 PM 1155

விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் மாஸ்டர் படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். இவர்கள் தவிர மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா உட்பட பலர் நடிக்கின்றனர். விஜய் உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். விஜய் பேராசிரியர் வேடத்தில் நடிப்பதால் தான் இப்படத்திற்கு மாஸ்டர் என பெயரிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மாஸ்டர் படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 9 -ந்தேதி வெளியாக உள்ளது. தொடர்ந்து 4, 5 நாட்கள் விடுமுறை வருவதால் இந்த தேதியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி வைரலாகிய நிலையில், படத்தின் அடுத்த அப்டேட் எப்போது என ரசிகர்கள் காத்திருந்தனர்.

இந்நிலையில் மாஸ்டர் படத்தின் முதல் சிங்கிள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒரு குட்டி கதை எனும் இப்பாடல் வரும் பிப்ரவரி 14 - காதலர் தினத்தன்று வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாஸ்டர் படக்குழுவின் இந்த அறிவிப்பால், விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

 

 

Comment

Successfully posted