கழுத்தில் அணியக்கூடிய “வைரஸ் ஷட் அவுட்” என்ற புதிய வகை கிருமி நாசினி விற்பனை!!

Jul 09, 2020 08:34 AM 640

வைரஸ் ஷட் அவுட் என்ற பெயரில், கழுத்தில் அணிந்துகொள்ளக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள கிருமிநாசினி, சென்னையில் விற்பனைக்கு வந்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு வகையான கிருமி நாசினிகள், முகக் கவசங்கள் சந்தைக்கு வந்துள்ள நிலையில், வைரஸ் ஷட் அவுட் என்ற புதிய வகை கிருமி நாசினி விற்பனைக்கு வந்துள்ளது. சோடியம் குளோரைட், இயற்கை ஜியோலைட் உள்ளிட்ட மூலப்பொருட்களுடன், சிறிய பையில் உள்ள இந்த கிருமிநாசினியை கழுத்தில் அணிந்து கொண்டால், ஒரு அடி தூரத்திற்கு கிருமிகள் அண்டாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக, சென்னை விற்பனையாளர் விகாஷ் தெரிவித்துள்ளார்.

Comment

Successfully posted