இந்தியாவில் விமான இருக்கை தொடர்பாக புதிய உத்தரவு!

Jun 02, 2020 12:29 PM 2190

விமானத்தின் ஒரே வரிசையில் உள்ள நடு இருக்கையிலும் பயணிகள் அமர நேரிட்டால், முழு பாதுகாப்பு கவச தொகுப்பு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.இந்தியாவில் உள்நாட்டு விமான போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டுள்ள நிலையில், நடுவில் உள்ள இருக்கையில் பயணிகள் அமரக்கூடாது என ஏற்கெனவே விமானப் போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது. ஆனால், பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில், ஒரே வரிசையில் உள்ள அனைத்து இருக்கைகளிலும் பயணிகள் அமர அனுமதி வழங்கினால், அவர்கள் அனைவருக்கும், முழு பாதுகாப்பு கவச தொகுப்பை அளிக்க வேண்டும் என இந்திய விமான போக்குவரத்து ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக பயணித்தால், 3 இருக்கைகளையும் பயன்படுத்தி ஒன்றாக அமரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் நாளை முதல் அமல்படுத்தப்படும் என விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

Comment

Successfully posted