மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு

Nov 27, 2019 09:38 AM 282

மகாராஷ்டிரா தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக பதவியேற்று கொண்டனர்.

சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு அடுத்தடுத்த திருப்பங்களால் மகாராஷ்டிரா அரசியலில் குழப்பம் நிலவி வந்தது. இதனால் புதிய உறுப்பினர்கள் பதவியேற்காமல் இருந்து வந்தனர். இந்த நிலையில், மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் இன்று காலை 8 மணிக்கு கூடியது. இதில், சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற 287 பேர் சட்டமன்ற உறுப்பினர்களாக பதவியேற்று கொண்டனர். தேவேந்திர ஃபட்னாவிஸ், அஜித் பவார் உள்ளிட்டோருக்கு இடைக்கால சபாநாயகர் காளிதாஸ் கோலம்பகர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

Comment

Successfully posted