ராஜபக்சே அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு

Nov 02, 2018 10:11 AM 320

இலங்கையில் ராஜபக்சே தலைமையிலான அரசில் புதிய அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

இலங்கையில் சமீபத்தில் ஏற்பட்ட திடீர் அரசியல் குழப்பத்திற்கு பின்னர் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவுக்கு பதிலாக ராஜபக்சே பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். இந்த திடீர் மாற்றத்தால் இலங்கை முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் உலகம் முழுவதும் கண்டன குரல்கள் எழுந்தன.

இந்த நிலையில் ராஜபக்சே அமைச்சரவையில் புதிய அமைச்சர்களுக்கு அந்த நாட்டின் குடியரசுத் தலைவர் சிறிசேனா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 2 மந்திரி சபை அமைச்சர்கள், 5 ராஜாங்க அமைச்சர்கள் மற்றும் 6 பிரதிநிதி அமைச்சர்கள் ஆகியோர் பதவி ஏற்றுக்கொண்டனர்.

Comment

Successfully posted