நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கும் இந்திய அணி

Jan 13, 2020 09:35 AM 504

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வருகிற 24ஆம் தேதி தொடங்குகிறது. டி20 தொடரில் பங்கேற்கும் 16 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. விராத் கோலி தலைமையிலான இந்திய அணியில், ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், ஷிகர் தவான், ஸ்ரேயார்ஸ் ஐயர், மணிஷ் பாண்டே, ரிஷப் பந்த், ஷிவம் துபே, குல்தீப் யாதவ், சாஹால், வாஷிங்டன் சுந்தர், பும்ரா, முகமது சமி, சைனி, ரவிந்திர ஜடேஜா மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இலங்கைக்கு எதிரான தொடரில் அணியில் இடம் பெற்ற இளம் வீரர் சஞ்சு சாம்சன், நியூசிலாந்து எதிரான டி20 தொடரில் இடம் பெறவில்லை.

Comment

Successfully posted