நியூசிலாந்து கெர்மடெக் தீவுகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது!

Mar 05, 2021 12:24 PM 6929

நியூசிலாந்தில் அடுத்தடுத்து மூன்று முறை நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், பசிபிக் பெருங்கடலில் சுனாமி அலை உருவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நியூசிலாந்தின் ஆக்லாந்து அருகே வடக்கு தீவின் கரையோரத்தில் நேற்று இரவு 7 மணியளவில், 7 புள்ளி 2 என்ற ரிக்டர் அளவு கோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி நியூசிலாந்தின் ஆக்லாந்தில் இருந்து கிழக்கு 414 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது என்றும் கடற்மேற்பரப்பில் இருந்து 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதைத் தொடர்ந்து வடக்கு தீவில் மீண்டும் 7 புள்ளி 4 என்ற ரிக்டர் அளவு கோலில் நிலநடுக்கம் உணரப்பட்டது.

கெர்மடெக் (Kermadec) தீவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் 8 புள்ளி ஒன்று ரிக்டர் அளவு கோலில் பதிவானது.

அடுத்தடுத்து மூன்று முறை நிகழ்ந்த நிலநடுக்கத்தால்.  பசிபிக் பெருங்கடலில் சக்திவாய்ந்த சுனாமி அலை உருவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தை உணர்ந்த பொதுமக்கள், வீடுகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட கட்டடங்களில் இருந்து வெளியேறினர்.

அதே நேரம், நிலநடுக்தத்தால் எந்த உயிர்தேசமும் ஏற்படவில்லை என்று நியூசிலாந்து அரசு தெரிவித்துள்ளது. 

Comment

Successfully posted